அயோக்யா படம் நஷ்டமா? வெளியான அதிர்ச்சி தகவல்!

Ayogya

விஷால் நடிப்பில் தெலுங்கு டெம்பர் படத்தின் ரீமேக் படமான அயோக்யா மே 10ம் தேதி திரைக்கு வந்தது. ஆனால் பல பிரச்சனைகளால் முதல் நாளில் படம் ரிலீஸ் ஆகாமல் பல பஞ்சாயத்துகளுக்கு பிறகு இரண்டாம் நாள் தான் ரிலீஸ் ஆனது.

மீடியாக்களில் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் படத்தை வெளியிட்ட நிறுவனத்திற்கு சுமார் 5 கோடிக்கும் மேல் நஷ்டம் இருக்கலாம் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்தில் பேச்சு உள்ளது. மொத்தம் 30 கோடிக்கு இந்த படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விஷால் பல பிர்ச்சனைகளில் இருந்ததால் அயோக்யா படத்தினை விளம்பரப்படுத்தும் முயற்ச்சிகள் எதுவுமே செய்யாதது தான் வசூல் குறைந்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது

Suggestions For You

Loading...