தளபதி 63யில் கிரிக்கெட்… போட்டோவை பாருங்க புரியும்!

vijay and atlee

தெறி, மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் – அட்லி கூட்டணி அமைந்துள்ளது. விஜய்யின் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு ‘தளபதி 63 ’ என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராப், கதிர், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஷூட்டிங்கிற்கு இடையே இயக்குனர் அட்லீ படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Loading...