“விஜய் 63″க்கு மைகேல் என தலைப்பு வைத்ததற்கு காரணம் இது தானா?

விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட படப்ப்பிடிப்பு சென்னை அருகே உள்ள பின்னி மில்லில் அதிரடி சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது.

இந்நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பில் விஜய், நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சியின் படப்பிடிப்பை நடத்த அட்லி திட்டமிட்டிருந்தார்

இப்படத்தில் விஜய்யின் பெயர் மைக்கேல் என சமீபத்தில் தகவல் பரவி வந்த நிலையில் தற்போது மற்றொரு தகவல் அந்த பெயர் பற்றி உலா வருகிறது.

ஹிந்தியில் கேல் என்றால் விளையாட்டு என்று அர்த்தமாம். அதனால் தான் மைகேல் என அட்லீ வைத்துள்ளார் என கூறி ஒரு தகவல் பரவி வருகிறது.

ஆனால் எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் படக்குழுவிடம் இருந்து வரவில்லை என்பதால் இதுவும் வந்தந்தியாக கூட இருக்கலாம் என தெரிகிறது.

Suggestions For You

Loading...