தனுஷ் ரசிகர்களுக்கு இன்று அசுரனனின் ஸ்பெஷல் விருந்து – என்ன தெரியுமா?

வட சென்னை படத்தின் இரண்டாம் பாகத்திற்கு முன்பு தனுஷ், வெற்றிமாறன் இணைந்து அசுரன் என்ற படத்தை உருவாக்கவுள்ளார்கள். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷுடன் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் இணைந்து நடிக்கவுள்ளார்.

வி கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

அதில் தனுஷ் புதிய கெட்-அப்பில் தோன்றியிருந்தார். நாளை இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் இன்று 6 மணிக்கு புதிய போஸ்ட்டர் ஒன்று வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.

Loading...