ஆசியா விஷன் சிறந்த நடிகர், நடிகை விருது வாங்கிய

சினிமா கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் ஆசியா விஷன் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது, இதன் 13வது ஆசியா விஷன் விருது விழா சமீபத்தில் துபாயில் நடந்தது.

இதில் சிறந்த நடிகருக்கான விருது விக்ரம் வேதா படத்திற்காக விஜய் சேதுபதிக்கும், சிறந்த நடிகருக்கான விருது (critics) தனுஷ்க்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் வடசென்னை, தி எக்ஸ்டராடினரி ஜோர்னி ஆஃப் ஃபகிர் என இரண்டு படங்களுக்காக அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இன்னொரு சிறந்த நடிகருக்கான விருது பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு பதமாவத் படத்திற்காக கொடுக்கப்பட்டது.

அதே போல சிறந்த நடிகைக்கான விருது திரிஷாவுக்கு கொடுக்கப்பட்டது. சிறந்த பெர்ஃபாமர் விருது பேரன்பு படத்திற்காக தங்கமீன்கள் புகழ் சாதனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் திரிஷா, விஜய் சேதுபதி, ரன்வீர் சிங், டொவினோ தாமஸ், அபர்ணா பாலமுரளி என பலர் கலந்துகொண்டனர்.

Suggestions For You

Loading...