காப்பான் படக்குழு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

கே. வி. ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில் மோகன்லால், சூர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இயக்குநர் கே.வி. ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் காப்பான் படத்தின் படப்பிடிப்பில் ஆர்யா பணிகள் அனைத்தும் முடிவடைந்தது. ஆர்யாவுடன் பணிபுரிவது மிகச் சிறந்த அனுபவம். என்றார். படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

பின்னர் இதற்கு பதிலளித்த ஆர்யா, நன்றி சார். உங்களுடன் பணிபுரிந்தது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. உங்களுடைய அடுத்த படத்துக்காக என்னுடைய நம்பரை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் . சூர்யா சார், உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி என்றார்.

Suggestions For You

Loading...