சிவகார்த்திகேயனை சீண்டும் அருண் விஜய்? ட்விட்டரில் ரசிகர்கள் மோதல்!

sivakarthikeyan arun vijay

சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று மிஸ்டர் லோக்கல் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

இந்நிலையில் இப்படத்திலேயே ‘நீயெல்லாம் மாஸ் காட்ட ஆரம்பிச்சுட்ட்’ என்று சதீஷ் கேட்க, அதற்கு சிவகார்த்திகேயன் ‘என் மேல ரொம்ப காண்டுல இருக்கீங்க போல’ என்று அருண்விஜய் முன்பு பேசியதற்கு பதில் கூறும் விதமான பேசி இருப்பார்.

ஆனால், இன்று அருண்விஜய் டுவிட்டரில் கிண்டல் செய்யும் விதமாக ஒரு ஸ்மைலியை போட்டுள்ளார், இதை பார்த்த எல்லோரும் கண்டிப்பாக இவர் சிவகார்த்திகேயனை தான் சீண்டுகின்றார் என கோபமாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

தர்பார் இன்ட்ரோ பாடல் – மீண்டும் இணையும் பழைய கூட்டணி!

இதற்காக தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்திருக்கும் நடிகர் அருண் விஜய், “ எனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது. அது சம்பந்தமான ட்வீட் தான் அந்த ஸ்மைலி ட்வீட். தயவு செய்து யாரும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். நான் இந்த தொழிலை நேசிப்பதால் என்னுடைய பணியில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறேன்” என்று கூறியுள்ளார்.

Loading...