அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான் – செம விருந்து இருக்கு!

ஹாலிவுட் சூப்பர் ஹீரோஸ் படமான அவெஞ்சர்ஸ் சீரிஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபலம். இதன் இறுதி பாகமான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தியாவிலும் இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. இதற்கான தமிழ் டப்பிங் வெர்ஷனுக்கான வசனங்களை பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தான் எழுதப்போகிறார்.

இந்நிலையில் இந்திய ரசிகர்களை கவரும் படி இப்படத்திற்கு ஒரு மார்வெல் ஆன்தம் ஒன்றுதயாராகவுள்ளது.

இதை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் ஏ.ஆர். ரஹ்மான் தான் இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த பாடல் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

இதற்கு முன்பு ஏ.ஆர்.ரஹமான் Million Dollar Arm, 127 Hours and Slumdog Millionaire போன்ற ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...