முதலில் இதை பண்ணிட்டு பாட வாங்க – ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த அட்வைஸ்!

பாடகர்களை போல தங்கள் படங்களில் நடிகர்களும் பாடல்களை பாடிவருகிறார்கள். இந்த பழக்கம் தற்போது அதிகமாகி முன்னணி நடிகர்கள் விஜய், சூர்யா, தனுஷ் முதல் சிறிய நடிகர் சிவகார்த்திகேயன் வரை எல்லாரும் பட தொடங்கிவிட்டார்கள்.

பாடுவதற்காகவே பயிற்சியெடுத்து தனி திறமையை வளர்ந்துவரும் பல பாடகர்களுக்கு இதனாலே வாய்ப்பு கம்மியாகி வருகிறது. சில நடிகர்கள் பாடும்போது செய்யும் பிழைகளை கம்ப்யூட்டரில் சரி செய்து விடுவார்கள்.

தற்போது ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் நடிகைகள் பாடல்களை பாடுவதற்கு முன்பாக முறையான பயிற்சி எடுத்துக்கொண்டு பாடுவது நல்லது என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் விளம்பர விழாவில் பங்கேற்ற ஏ ஆர் ரஹ்மான் பேசியதாவது. “சினிமாவில் நடிகா், நடிகைகளே தங்களது படங்களில் பாடுவது உலகம் முழுவதும் தற்போது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. அது தவறு இல்லை ஆனால், அவர்கள் பாடலை பதிவு செய்யும் முன் அவா்களுக்கு முறையான பயிற்சி அவசியம். அதற்காக அவர்கள் நேரம் ஒதுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Loading...