அனிருத் காதலிக்கும் பெண் யார்?

இளம் வயதிலே முன்னணி இசையமைப்பாளராக வளம் வருபவர் அனிருத். ரஜினி, அஜித், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்துள்ள இவர் தற்போது கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்திற்கும் இசையமைக்கவுள்ளார்..

இப்படி இசை துறையில் பிஸியாக இருக்கும் இவர் யாரையோ காதலிக்கிறார் என்று கிசு கிசு கிளம்பியுள்ளது.

இந்த நேரத்தில் ஒரு பேட்டியில் அனிருத்திடம், யாரையாவது காதலிக்கிறீர்களா, அந்த பெண் யார் என கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர், ரொம்ப நாளாகவே சிங்கிளாக தான் இருக்கிறேன், இசையமைப்பாளராக ஆவதற்கு முன் காதலித்தேன்.

இப்போது உள்ள வேலையில் காதலிப்பது என்பது சரியாக இருக்காது, அதற்காக இப்படியே இருக்க மாட்டேன், காதல் வரலாம் என்று கூறியுள்ளார்.

Suggestions For You

Loading...