பணம் சம்பாதிக்க மட்டும் இந்தியாவா? நெட்டிசன்களுக்கு அக்‌ஷய் குமார் பதிலடி!

akshay-kumar

பிரதமர் நரேந்திர மோடியை நேர்காணல் செய்திருந்தார் அக்‌ஷய் குமார். மேலும் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சார்பாக விளம்பரங்களிலும் நடித்திருந்தார். ஆனால், அவர் வாக்களிக்கவில்லை.

அக்‌ஷய் குமார் வாக்களிக்காததை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். அவர் வாக்களிக்காததற்கு காரணம் அவர் கனடா குடியுரிமை வைத்திருப்பதுதான் என்று பலரும் கூறினர்.

மேலும் சில வருடங்கள் முன்பு அக்‌ஷய் குமார் கனடாவில் பேசிய வீடியோவும் பரவி வருகிறது. அதில் அக்ஷய் “கனடா தான் என் வீடு. நடிப்பதில் இருந்து ஓய்வு பெறும்போது இங்கு வந்து தான் செட்டில் ஆவேன்” என பேசுகிறார்.

இந்நிலையில் குடியுரிமை சர்ச்சை குறித்து அக்‌ஷய் குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “என்னுடைய குடியுரிமை குறித்து ஏன் இவ்வளவு எதிர்மறையான விமர்சனங்கள் எழுகிறது என்று புரியவில்லை. என்னிடம் கனடா பாஸ்போர்ட் இருப்பதை நான் ஒருபோதும் மறைக்கவோ அல்லது மறுக்கவோ இல்லை. அதைப்போலவே 7 வருடங்களாக நான் கனடா சென்றதில்லை என்பது உண்மையே. நான் இந்தியாவில்தான் பணியாற்றுகிறேன். இந்தியாவில்தான் வரி கட்டுகிறேன். யாருக்கும் என்னுடைய நாட்டுப்பற்றினை நிரூபிக்க வேண்டியதில்லை தேவையில்லாமல் என்னுடைய குடியுரிமை குறித்து விமர்சனங்கள் எழுவது வருத்தமாக உள்ளது. இது தனிப்பட்ட, சட்ட ரீதியான அரசியலற்ற ஒரு விஷயம். இந்தியாவை வலிமையாக்க என்னால் ஆன சிறிய பணியை தொடர்ந்து செய்ய விரும்புகிறேன்.

அக்‌ஷய் குமார் 2.0 படத்தில் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார். இது தவிர பேட்மேன், டாய்லெட் போன்று சமூக அக்கறையுள்ள படங்களில் நடித்துள்ளார். ‘ரஷ்டம்’ என்ற படத்தில் தேசப்பற்று மிக்க கடற்படை அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...