ஒரே டேக்கில் 10 நிமிட காட்சி – தல 59 செட்டை மெர்சலாகிய அஜித்!

தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வருகிறார். அஜித்தின் 59வது படமான இதை போனி கபூர் தயாரிக்க படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஸ்வாசம் படத்தில் அஜித் சிங்கிள் டேக்கில் டான்ஸ் ஆடி அசத்தியது போல தற்போது நடித்துவரும் படத்திலும் ஒரு ஸ்பெஷல் விஷயத்தை செய்துள்ளது.

அதாவது, அஜித் இந்த தல 59 படத்தில் அவர் 10 நிமிட டையலாக்கை ஒரே டேக்கில் பேசி அசத்தியுள்ளார். படம் வெளியாகும் போது ரசிகர்கள் இதை நிச்சயம் கொண்டாடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துவரும் இப்படம் மே மாதம் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

Suggestions For You

Loading...