கோடி ரூபாய் கொடுத்ததும் இந்த விளம்பரத்தில் நடிக்க மறுத்த தல அஜித் !

இந்திய சினிமாவில் முக்கியமான நடிகர் தல அஜித். ரஜினிக்கு பிறகு வட இந்தியாவில் அதிகம் ரசிகர்களை கொண்ட நடிகர் என்றால் அது அஜித் தான்.

சமீபத்தில் அஜித்தின் விஸ்வாசம் படமும் ரஜினியின் பேட்ட படமும் ஒரே நாளில் வெளியாகி இரண்டுமே ஹிட் அடித்தது. இதில் அஜித்தின் விஸ்வாசம் படம் தமிழகத்தில் பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்தது வருகிறது.

இப்படம் முழுவதும் வேட்டி சட்டை அணிந்துதான் நடித்திருப்பார். இதனால் இவரை பிரபல வேட்டி நிறுவனம் தங்கள் ப்ராண்ட் விளம்பரத்தில் நடிக்க அணுகியுள்ளது.

ஒருநாள் கால்ஷீட்டுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் கொடுக்க முன்வந்தும் நடிக்க மறுத்துவிட்டாராம்.

ஆரம்ப காலகட்டங்களில் நடித்த அஜித் தனக்கென ரசிகர் வட்டம் வந்தபிறகு எவ்வளவு பணம் தர முன்வந்தும் விளம்பரங்கள் நடிப்பதையே நிறுத்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...