நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்திற்கு இப்படியொரு தமிழ் பெயரா.. தெறிக்கவிடும் ரசிகர்கள்!

அஜித் தற்போது நேர்க்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதனை ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.

இதில் வித்யா பாலன், ஷ்ரதா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காக நேர்க்கொண்ட பார்வை உருவாகியிருக்கிறது.

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரும் நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் இதனை தயாரித்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே உருவாகியிருக்கும் இப்படம், வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், இப்படத்தில் அஜித் மற்றும் பிற கதாபாத்திரங்களின் பெயர்கள் இவை தான் என சமூகவலைதளத்தில் ஒரு தகவல் வைரலாகியுள்ளது.

அஜித், நீதிதேவன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அவருக்கு மனைவியாக நடிக்கும் வித்யாபாலன் குணவதி தேவன் என்ற பெயரில் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரங்கராஜ் பாண்டே தயாளன் என்ற பெயரிலும், ஷ்ரதா ஸ்ரீநாத் மீரா என்ற பெயரிலும், ஆதிக் ரவிச்சந்திரன் ஷிவ்ராஜ் என்ற பெயரிலும் நடித்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

Suggestions For You

Loading...