அஜித் தவறவிட்ட கே.வி.ஆனந்த் படம் – இந்த மெகா ஹிட் படத்தை விட்டுட்டாரே..!!

ajith-kv-anand

தல அஜித் தமிழ் சினிமாவினி மாஸ் நடிகர்களில் ஒருவர். இவரது படங்கள் வெளியான அன்று தான் தீபாவளி போல காட்சியளிக்கும். ஆனால் அஜித் தனது சினிமா பயணத்தில் நிறைய நல்ல படங்களை தவறவிட்டுருக்கிறார்.

சூர்யா நடித்த கஜினி, காக்க காக்க ஆகிய இரண்டு படங்களும் அஜித்திற்கு வந்தது தான், பாலாவின் நான் கடவுள் படம் கூட அஜித்திற்கு வந்தது தான். அப்படி சொல்லிக்கொண்டே போகலாம் இன்னும் நிறைய படங்கள் இருக்கிறது.

இந்நிலையில் அஜித் அந்த வரிசையில் ஒரு மெகா ஹிட் படத்தை இழந்துள்ளார். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் 2011ம் ஆண்டு வெளிவந்த கோ படம் முதலில் அஜித்திற்கு தான் வந்துள்ளதாம், அஜித்தை மனதில் வைத்துதான் இந்த கதையை கே.வி.ஆனந்த் உருவாக்கினாராம்.

அவர் நடிக்காமல் போக தான் அது தனக்கு வந்ததாக ஜீவா ஒரு பேட்டியில் சொல்ல, இதைக்கேட்ட அஜித் ரசிகர்களுக்கு இப்படி ஒரு மெகா ஹிட் படம் மிஸ் ஆகிவிட்டதே என்று வருத்தம் தான். மேலும், கோ படம் திரைக்கு வந்து இன்றுடன் 8 வருடங்கள் ஆவது குறிப்பிடத்தக்கது.

Loading...