ரசிகர்கள் மீது கடுமையாக கோபத்தில் அஜித் – என்ன நடந்தது?

அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் படம் வருகின்றது என்றாலே மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பு உருவாகிவிடும்.

இந்நிலையில் அஜித் நடிப்பில் அடுத்து நேர்கொண்ட பார்வை வரும் ஆக்ஸ்ட் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும், அஜித் சமீப காலமாக மிகவும் அப்செட்டில் இருக்கிறாராம், என்ன என்று விசாரிக்கையில் அஜித் வாக்களிக்க வந்த போது பல ரசிகர்கள் அங்கு கூடினார்கள்.

இதனால் அஜித்தால் வாக்களிக்க கூட போக முடியாத நிலை உருவாகியது, ஆனால், அதெல்லாம் கூட அஜித்திற்கு பெரிய கோபத்தை ஏற்படுத்தவில்லையாம்.

பல ரசிகர்கள் அஜித்தை பார்ப்பதற்காகவே அவர்கள் வாக்களிக்காமல் திருச்சி, மதுரை போன்ற ஊர்களில் இருந்து சென்னை வந்தார்களாம்.

இது தான் அஜித்திற்கு மிக கடுமையான கோபத்தையும், வருத்ததையும் ஏற்படுத்தியுள்ளதாம், இதற்கெல்லாம் அஜித்தே முன்வந்து பேசினால் மட்டுமே ஒரு தீர்வு கிடைக்கும்.

Loading...