உலகளவில் அஜித்தின் வசூல் சாதனை – பாஸ் ஆபிஸ் லிஸ்ட்!

தல அஜித் நடித்து சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. தந்தை மகள் பாசத்தை கொண்டு உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்றது.

10வது வாரத்தை கடந்து இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. உலகளவில் அவரின் இந்த பட வசூல் முந்தய படமான விவேகத்துடன் ஒப்பிடுகையில் 49 % அதிகரித்துள்ளது. அதாவது ரூ 150 கோடி வசூல் சாதனை செய்துள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் எடுத்துக்கொண்டால் விஸ்வாசம் படம் ரூ 126.6 கோடி வசூல் செய்துள்ளது. இதை விவேகம் படத்துடன் ஒப்பிட்டால் 90 % அதிகம் என்று சொல்ல வேண்டும்.

உலகளவில் மற்ற படங்களின் வசூல் என்ன, முந்த படத்துடன் எவ்வளவு சதவீதம் வசூல் அதிகரித்துள்ளது என பார்போம்.

  • என்னை அறிந்தால் (2015) – ரூ 88.35 கோடி
  • வேதாளம் (2015) – ரூ 118.7 கோடி – 34.3%
  • விவேகம் (2017) – ரூ 121.02 கோடி – +1.9%
  • விஸ்வாசம் (2019) – ரூ 180.11 கோடி – +49%

Suggestions For You

Loading...