அஜித்தின் தனித்துவமான ஸ்டைல், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தைரியம் என அவரை பற்றி பேசு எவ்வளவு விஷயம் இருக்கிறது.
எந்தவித பின்பலமும் இல்லாமல் சினிமாவிற்கு வந்து சாதிப்பது எனபது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் அஜித் தனது விடாமுயற்சியால் சினிமாவில் உச்சத்தை தொட்டுள்ளார்.
ஆரம்பகாலத்தில் தன்னிடம் அஜித் பேசியதை வான்மதி பட நடிகை ஸ்வாதி தற்போது ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
அஜித்தின் 61வது படத்தை இயக்கும் மிரட்டலான இரண்டு இயக்குனர்கள்?
“விஜய்க்கு பேக் கிரௌண்ட் இருக்கு, எனக்கு யாருமே இல்லை. அதற்காகவே நான் கடினமாக உழைக்க வேண்டும். வெற்றி பெற்றால் தான் அடுத்தபடம் கிடைக்கும். கண்டிப்பாக ஒரு நாள் பெரிய ஹீரோவாக ஆவேன்” என கூறினாராம் அஜித்.
மேலும் பேசிய ஸ்வாதி, “விஜய் அவருடைய அப்பாவின் கனவை தான் நிறைவேற்றினார். ஆனால் அஜித் தன் சொந்த கனவை நிறைவேற்றியுள்ளார். கடின உழைப்பால் தான் அது முடிந்தது. அஜித் யாருக்கும் தெரியாமல் உதவி செய்வார். ஆனால் விஜய் உதவி செய்துவிட்டு அதை பப்லிசிட்டி செய்வார்” என குறிப்பிட்டுள்ளார்.