அஜித்தின் 60வது பட இயக்குனர் இவர் கிடையாது – வதந்திக்கு முற்றுப்புள்ளி!

அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். பிங்க் படத்தின் ரீமேக் படமான இதில் முக்கிய கதாபாத்திரங்களில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் நிலையில் அதற்குள் அவரின் அடுத்த பட தகவல்கள் வர ஆரம்பித்துவிட்டது.

போனி கபூர் அஜித்தின் 60வது படத்தை தயாரிப்பதாக கூறியிருந்தார் ஆனால் இயக்குனர் யார் என்று கூறவில்லை. இந்த நேரத்தில் வெங்கட் பிரபு தான் அஜித்தின் 60வது பட இயக்குனர் என்று தகவல் வந்தது.

கடைசியில் உண்மை என்னவென்றால் 60வது படத்தின் இயக்குனர் கண்டிப்பாக வினோத் தான் என்று கூறுகிறார்கள். ஆனால் தலயின் 61 அல்லது 62வது படத்தை வெங்கட் பிரபு இயக்குவது உறுதியாகியுள்ளதாம்.

Loading...