அஜித்தின் 60வது பட அறிவிப்பு விரைவில் வெளியாகுமா? இயக்குனர் யார் தெரியுமா?

அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் முடித்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அஜித் நடிக்கவிருக்கும் “தல 60” திரைப்படத்தையும் தானே தயாரிக்கப்போவதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார். இந்நிலையில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் அப்படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கவிருப்பதாக தெரிகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல்.10ம் தேதி ரிலீசாகும் என்று ஏற்கனவே தயாரிப்பு தரப்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

“நேர்கொண்ட பார்வை”படத்திற்கு பிறகு ஒரே ஆண்டில் ஹெச்.வினோத்-அஜித் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்திருப்பது தல ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துளளது.

Loading...