2020 புத்தாண்டில் அஜித்தின் அதிரடி ஆக்‌ஷன் – ரசிகர்கள் ரெடியா?

Ajith-60

அஜித் நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. எச்.வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர், இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார்.

இந்தியில் சூப்பர் ஹிட்டான ‘பிங்க்’ படத்தின் ரீமேக் இது. அஜித் ஜோடியாக வித்யா பாலன் நடிக்க, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி, ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தைப் பற்றிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அடுத்த படத்தையும் போனி கபூர் தயாரிப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தப் படத்தையும் எச்.வினோத் இயக்குகிறார் என்று ஏற்கெனவே தகவல் வெளியானது.

தற்போது, அடுத்த படத்துக்காக ஆக்‌ஷன் த்ரில்லர் கதை சொல்லியிருக்கிறார் எச்.வினோத் என்றும், அந்தப் படத்தை 2020-ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு விடுமுறையில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Suggestions For You

Loading...