அடுத்த கட்டத்திற்கு சென்ற “ஆதித்ய வர்மா” – அடுத்த ரிலீஸ் இது தான்!

Dhruv-Vikram

தெலுங்கு படமான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து முடித்து டீசர், டிரைலர் ஆகியவற்றை வெளியிட்டார்கள். பாலா இயக்கிய இப்படத்தில் விக்ரம் மகன் துருவ் நடித்தார்

ஆனால், படத்தைப் பார்த்த தயாரிப்பாளரும், விக்ரமும், பாலா இயக்கிய படத்தைப் பார்த்து தெலுங்கு ஒரிஜனல் படம் போல இல்லாமல் இருந்ததால் அந்தப் படத்தை வெளியிடாமல் நிறுத்திவிட்டார்கள். இருதரப்பும் சுமூகமாக அந்தப் பிரச்சினையை முடித்துக் கொண்டது.

Dhruv Vikram and Banita Sandhu
Dhruv Vikram and Banita Sandhu

பின்னர் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் இணை இயக்குனராகப் பணியாற்றிய கிரீஸ்யா என்பவரை வைத்து ‘வர்மா’ பெயரை ‘ஆதித்ய வர்மா’ என மாற்றி வேறு புது ஹீரோயினை வைத்து படத்தை எடுத்து முடித்துள்ளார்கள்.

அஜித் 60வது படத்தின் இசையமைப்பாளர் இவரா? உறுதிசெய்த புகைப்படம்?

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நேற்று முடிந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. விரைவில் டீசர் வெளியீடு நடைபெற உள்ளது.

Loading...