கமல் ஹாசனுக்கு ஜோடி தேர்வு – 180 பேர் நிராகரிகப்பட்டு கடைசியக தேர்வான நடிகை!

உலக நாயகன் கமல் ஹாசன் இந்திய சினிமாவில் பல சாதனைகள் புரிந்த பிரபலம். மேலும் இவர் இந்திய சினிமாவிற்கு பல புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தியவர்.

தற்போது இவர் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். அதே வேளையில் அவர் இந்தியன் 2, தேவர் மகன் 2 படங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசன் இந்த உயரத்தை அடைய வைத்த பெருமையில் இயக்குனர் பாலசந்தருக்கும் முக்கிய பங்குண்டு. அன்று பாலசந்தர் இயக்கத்தில் வந்த மரோ சரித்திரா படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க ஹீரோயினுக்கான தேர்வு நடந்ததாம்.

இதில் 180 பேர் நிராகரிகப்பட்டு கடைசியில் சரிதாவை தான் தேர்ந்தெடுத்தார்களாம். இதுகுறித்து அண்மையில் ஹைதராபாத் வந்துள்ள நடிகை சரிதா கூறியுள்ளார்.

Suggestions For You

Loading...