எம் ஜி ஆர் தடவினாரா? – கஸ்தூரிக்கு லதா அதிரடி பதில்!

நடிகை கஸ்தூரி சில காலங்களாக சர்ச்சையான கருத்துகளை கூறி பல வம்புகளில் சிக்கிவருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டி பற்றி விமர்சிக்கும் போது “என்னய்யா இது பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதைவிட அதிகமா தடவுறாங்க சிஎஸ்கே 81-4 (14 ஓவர்கள்)” என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்த ட்விட்டருக்கு அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதற்கு விளக்கம் அளிக்கும் வகையிலும் மன்னிப்பு கேட்டு ஒரு ட்விட் பதிவிட்டார் கஸ்தூரி. அதன்பிறகும் அவரை தொடர்ந்து வறுத்தெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை லதா இது பற்றி கருத்து கூறியுள்ளார். “நான் 45 வருடங்களாக சினிமா துறையில் இருக்கிறேன். யாரும் இப்படி பேசியதில்லை. கஸ்தூரி நாவை அடக்கவேண்டும்” என லதா கூறியுள்ளார்.

Suggestions For You

Loading...