பேண்ட் இருக்கா? இல்லையா? அபர்ணாதி வெளியிட்ட புகைப்படங்களால் சர்ச்சை!

ஆர்யாவின் எங்க வீடு மாப்பிளை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அபர்ணாதி. அதை தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டிய இவர் தற்போது வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் “ஜெயில்” படத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் அபர்ணாதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அந்த புகைப்படத்தில் அவர் கருப்பு நிற டீசர்ட்டும், சிவப்பில் ஓவர் கோர்ட்டும் அணிந்திருக்கிறார். சந்தன நிறத்தில் பேண்ட் போட்டிருக்கிறார்.

ஆனால், மாடியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் லைட்டிங் பிரச்சினையால் அவர் அணிந்திருக்கும் பேண்ட் நிறம் தோல் நிறத்திற்கு தெரிகிறது. இதனால் அவர் பேண்ட் போடாமல் போஸ் கொடுத்துடீங்க என்று நெட்டிசன்கள் திட்டத் தொடங்கினர்.

ஆனால், மற்றொரு புகைப்படத்தின் மூலம் லைட்டிங்கால் தான் அவரது பேண்ட் நிறம் அப்படி தெரிந்தது எனப் புரிந்து கொண்ட சிலர் மன்னிப்பு கேட்டுள்ளனர். மேலும் புகைப்படம் வெளியிடுவதற்கு முன்பு இதையெல்லாம் சரிபார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

Suggestions For You

Loading...