சிவகார்த்திகேயனை ஒட்டு போட வைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

sivakarthikeyan

தேர்தல் நடைமுறையில் முதல்வர் என்றாலும் மந்திரி என்றாலும், சாதாரணக் குடிமகன் என்றாலும் அனைவருக்கும் ஒரே நடைமுறை மாற்று ஒரே தேர்தல் விதி தான்.

கடந்த 18-ம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால் சிவகார்த்திகேயனுக்கு வாக்கு இல்லை.

வாக்காளர் பட்டியலில் இருந்து அவர் பெயர் நீக்கப்பட்டிருந்ததால் அவர் வாக்களிக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அவர் வாக்களிக்க முடியவில்லை.

ஆனால் சிறிது நேரம் கழித்து சிவகார்த்திகேயனுக்கு சிறப்புச் சலுகை கொடுத்து கைரேகை பதிவு செய்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் வாக்களித்துவிட்டுச் சென்ற சிவகார்த்திகேயன் வாக்களித்ததாக ஒரு போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர் எப்படி வாக்களித்தார் என்ற சர்ச்சை எழுந்தது.

துணை நடிகையிடம் தகாத வார்த்தையில் பேசிய அட்லீ – பரபரப்பு போலீஸ் புகார்!

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்த விவகாரத்தில் அவருக்கு சிறப்பு சலுகை வழங்கி வாக்களிக்க அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுகப்பட்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

Suggestions For You

Loading...