தளபதி 63 படப்பிடிப்பில் நடந்த விபரீதம் – வருத்தத்தில் படக்குழு!

thalapathy63

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதன் அப்டேட் ஏதாவது வருமா என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் தளபதி 63 படப்பிடிப்பில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. ஷுட்டிங் ஸ்பாட்டில் 100 அடிக்கு மேல் வைக்கப்பட்டிருந்த ஃபோக்கஸ் லைட் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

லைட் தவறி கீழே விழுந்ததில் அங்கு நின்று கொண்டிருந்த மின் பணியாளர் செல்வராஜ் என்பவர் படுகாயம் அடைந்தார்.

உடனே அவரை படக்குழுவினர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் படக்குழுவினரை கொஞ்சம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Loading...