மோசமான விமர்சனங்களை சந்தித்தாலும் 90 ml படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவா? விவரம் இதோ!

ஓவியா நடிப்பில் அனிதா உதீப் இயக்கியுள்ள படம் 90 ML . “A” சான்றிதழ் பெற்ற இப்படம் சர்ச்சையுடன் நேற்று வெளியாகியுள்ளது. சிம்பு இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மது அருந்துவது, கஞ்சா அடிப்பது , ஆபாசமாக பேசுவது என இப்படத்தில் எல்லை மீறி நடித்துள்ளார்கள் ஓவியா மற்றும் நடிகைகள்.

பெரிய அளவில் மார்க்கெட்டிங் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்ட இப்படத்தை ரசிகர்கள் தீட்டிவருகிறார்கள். வெளியான அனைத்து இடங்களிலும் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இதற்கிடையே இப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. சென்னையின் மட்டும் முதல் நாளில் 30 லட்சம் வசூல் செய்துள்ளது. 90ml படத்திற்கு காலை 5 மணி காட்சி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...