மருதநாயகம் படத்தில் நான் நடிக்கமாட்டேன் – கமல் ஓபன் டாக் !

உலகநாயகன் கமல்ஹாசன் என்றலே நம் அனைவரின் மனதிற்கு வருவது “நடிப்பின் நாயகன்” என்று தான், அவரின் கனவு படமான மருதநாயகம் படம் எப்போது வரும் என்பது தான் ரசிகர்களுக்கு நீண்ட காலமாக இருக்கும் கேள்வி. இதைப்பற்றி ஒரு பிரஸ் மீட்டில் பேசிய கமல் “மருதநாயகம் நிச்சியமாக துவங்கும் ஆனால் அதில் நான் நடிப்பது சந்தேகம் தான் ” என்று கூறியுள்ளார், எனவே இந்த படத்தில் சீயான் விக்ரம் நடிக்கவுள்ளார் என செய்திகள் பரவ ஆரம்பித்துள்ளது. நடிகர் விக்ரம் கமல் தயாரிப்பில் கடாரம் கொண்டான் படத்தில் நடித்திருந்தார், அதன் பிறகு கமல் தயாரிப்பில் மேலும் ஒரு படம் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். Loading…

Read More