அஜித்துக்கு கிடைத்த பெருமை! மொத்த அஜித் ரசிகர்களும் கொண்டாடும் ஒரு பெரும் தருணம்

ajith

அஜித்தை பொறுத்தவரை தன்னை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களில் நலன் கருதி தன் படங்கள் பற்றிய முடிவை எடுப்பார். பல அவரை அணுகினாலும் அஜித் சொல்லும் ஓகே தான் தயாரிப்பாளர்களுக்கு வேத வாக்கு.

அஜித்தின் படங்களில் மிக முக்கியமானது சிட்டிசன். சரவணன் சுப்பையா இயக்கத்தில் கடந்த 2001 ல் வந்த இப்படத்தில் அஜித் அறிவானந்தம், அந்தோனி, சுப்ரமணியம், அப்துல்லா நான்கு ரோல்களில் கலக்கியிருப்பார்.

படத்தில் அவருடன் மீனா, வசுந்தரா தாஸ், நக்மா, வினு சக்ரவர்த்தி, நிழல்கள் ரவி என பலர் நடித்திருந்தார்கள். அத்திப்பட்டி என்னும் கடல் கிராமத்தை மையமாக வைத்து கதை ஓடும்.

இதே நாள் ஜூன் 8 – 2001 ல் தான் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் 18 ம் ஆண்டு கொண்டாட்டத்தை ரசிகர்கள் கையில் எடுத்து வருகிறார்கள்.

டிவிட்டரில் #18YrsOfMegaBlockbusterCITIZEN என ரசிகர்களால் குறிப்பிடப்பட்டு வருகிறது.

Suggestions For You

Loading...